நெல்லை மாவட்டத்தில் 2020ல் மணல் கடத்தல், போதை பொருள் கடத்தல் அதிகரிப்பு

நெல்லை: நெல்லையில் 2020ம் ஆண்டு மணல் கடத்தல், ேபாதை பொருள் கடத்தல் வழக்குகள் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் சாலை விபத்து மற்றும் சாலை விபத்து மரணங்கள் குறைந்துள்ளது என்று மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற சம்பவங்கள், சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்து மரணங்கள் குறைந்துள்ளது என்று மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2020ம் ஆண்டு 41 கொலை வழக்குகள் பதிவாகி அனைத்து வழக்குளிலும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு 35 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 6 வழக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன. 2020ம் ஆண்டு கூட்டுக்கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற வழக்குகளில் பதிவான 345 வழக்குளில் 205 வழக்குகளில் ெதாடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.78 லட்சத்து 82 ஆயிரத்து 990 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒன்பது பழைய சொத்து வழக்குகளில் ரூ.5 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டதோடு மொத்தம் 84 லட்சத்து 11 ஆயிரத்து 990 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டில் போதை தடுப்பு குற்றத்தில் 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவை குறித்து 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 3 லட்சத்து 89 ஆயிரத்து 668 ரூபாய் மதிப்புள்ள 769.74 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 லட்சத்து 59 ஆயிரத்து 971 ரூபாய் மதிப்புள்ள 1856.11 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது 2020ம் ஆண்டு 759 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு சட்ட விரோதமாக ஆற்றுமணல் திருட்டு மற்றும் கடத்தல் சம்மந்தமாக 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 527 பேர் கைது செய்யப்பட்டதோடு 405 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019ம் ஆண்டு 184 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 263 பேர் கைது செய்யப்பட்டு, 227 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது 2020ம் ஆண்டு 163 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு 720 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 147 பேர் மரணமடைந்துள்ளனர். 2019ம் ஆண்டு 851 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன.

அவற்றில் 203 பேர் மரணமடைந்துள்ளனர். 2019ம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 2020ம் ஆண்டு 131 சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன. சாலை விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 27.5 சதவீதம் குறைந்துள்ளது.

நெல்லை மாவட்ட காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றம் மற்றும் சாலை விபத்துக்களை தடுப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

122 பேர் மீது குண்டர் சட்டம்

நெல்லை மாவட்டத்தில் 2020ம் ஆண்டு தொடக்கம் முதல் இன்று வரை சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஈடுபட்ட 80 பேர், தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 11 பேர், கள்ளச்சாராயப் பேர்வழிகள் 2 பேர், பாலியல் குற்றவாளிகள் 9 பேர், போதைப்பொருள் மற்றும் கஞ்சா விற்பனை செய்தவர்கள் 10 பேர், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 10 பேர் உட்பட மொத்தம் 122 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு 102 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதோடு ஒப்பிடும்போது 2020ம் ஆண்டு 20 பேர் கூடுதலாக இச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: