தக்காளி தயிர் பச்சடி

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து, தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு நன்கு வதக்கி இறக்கவும். இத்துடன் தயிர், கொத்தமல்லி, புதினா சேர்த்து கலந்து சப்பாத்தி, தேங்காய் பால் சாதத்துடன் பரிமாறவும்.