திருத்தணி முருகன் கோயிலில் படித்திருவிழா

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் மலைக்கோயிலுக்கு செல்வதற்கு, 365 படிகள் அமைக்கப்பட்டுள்ளது.  ஆண்டுதோறும் டிச.31ம் தேதி படித்திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும், படிகள்தோறும்  பெண்கள் மஞ்சள், குங்குமம் இட்டு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.    கொரோனா தொற்று காரணமாக நேற்று படித்திருவிழா எளிமையாக முறையில் கோயில் நிர்வாகம் பஜனை குழுவினரை வரவேற்று துவக்கி வைத்தனர். மலையடிவாரத்தில் நடந்த துவக்க விழாவில் கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை  ஆணையர் பழனிக்குமர் திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன், அரக்கோணம் முன்னாள் எம்.பி.அரி, ஆவின் சேர்மன் வேலஞ்சேரி த.சந்திரன் ஆகியோர் பங்கேற்று படிகளுக்கு பூஜை நடத்தி துவக்கி வைத்தனர்.

 நள்ளிரவு தரிசனம்  தடை செய்யப்பட்டு, இரவு, 8:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.  மேலும் போலீசார் இரவு 7.30 மணிக்குமேல் பக்தர்களையும் வாகனத்தையும் அனுமதிக்கவில்லை. ஜன.1 ம் தேதி  புத்தாண்டையொட்டி   காலையில் 6 மணியிலிருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

Related Stories: