வாகன உரிமையாளர்கள் சிரமத்தை குறைக்க உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பெறுவதற்கு எளிய நடைமுறை: விண்ணப்ப வேலை பாதியாக குறைப்பு

புதுடெல்லி: வாகனங்களில் உயர் பாதுகாப்புடன் கூடிய நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என்றும், கலர் ஸ்டிக்கரை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் ஒட்ட வேண்டும் என்றும் வாகன போக்குவரத்து சட்டத்தில் திடீரென அறிவிக்கப்பட்டது, நாடெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், ஆன்லைனில்  இதற்கான இணையதளத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டு இந்த சேவை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.  வாகனங்களில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்துவதற்கு உரிமையாளர்களுக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தலையிட்டு அரசுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில், இதற்கான நடைமுறை எளிதாக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு  தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தில் வாகன எண்ணை குறிப்பிடுவது தற்போது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தில் இருந்த பல தேவையற்ற கருதப்படும் கட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இதனை நிரப்புவதற்கான நேரம் பாதியாக குறைந்துள்ளது.

மேலும், இதற்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளமும் மத்திய அரசின் வாகனங்கள் பற்றிய `வாகன்’ தகவல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன உரிமையாளர் வாகனத்தின் எண்ணை குறிப்பிட்டால் போதும், வாகனத்தின் விவரங்கள் பற்றிய முழுத் தகவலும் விண்ணப்பத்தில் கிடைக்கின்றன. இதன் மூலம், 12 நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய இடத்தில், தற்போதைய நடைமுறை பாதியாக அதாவது 6 ஆக குறைந்துள்ளது.

Related Stories: