வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரும் போராட்டம்.: வரும் 6-ம் தேதி சி.ஐ.டி.யு. சிறை நிரப்பும் போராட்டம்

நாகர்கோவில்: மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், தொழில்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினறனர். இந்தநிலையில் நாகர்கோவில் பூங்கா முன்பு சி.ஐ.டி.யு. தொழில்சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 6-ம் தேதி சி.ஐ.டி.யு. சார்பில் தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. முன்னதாக மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

நாகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் விவசாயிகளை மத்திய அரசு வஞ்சிக்கக்கூடாது என முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாளையொட்டி தஞ்சாவூரில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை முறியடிப்போம் என்று பெ.மணியரசன் உள்ளிட்டோர் உறுதி மொழி எடுத்தனர். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராட வேண்டும் என பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கும்பகோணம் அருகே நெல் குவிண்டால் ரூ.3,500 என விலை நிர்ணயம் செய்ய கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தலையில் சாக்குப்பையை போட்டுக்கொண்டு நூதன முறையில் போராடிய அவர்கள், தங்கள் கோரிக்கைக்கு செவிசாயிக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

Related Stories: