குருபர் சமூகத்திற்கு இடஒதுக்கீடு விஷயத்தில் மடாதிபதிகளின் கவனத்தை திசைதிருப்பும் பாஜவினர்: எம்எல்ஏ யதீந்திரா குற்றச்சாட்டு

மைசூரு: குருபர் சமூகத்தினருக்கான எஸ்.டி இடஒதுக்கீடு விஷயத்தில் பா.ஜ.வினர் மடாதிபதிகளின் கவனத்தை திசைத்திருப்பி வருகின்றனர் என்று எம்.எல்.ஏ. யதீந்திரா  தெரிவித்தார். மைசூருவில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குருபர் சமுகத்தினருக்கான எஸ்.டி.இடஒதுக்கீடு விஷயத்தில் மடாதிபதிகள் கவனத்தை திசைத்திருப்பி வருகின்றனர். இதனால், வேறு வழியில்லாமல் மக்களின் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். குருபர் சமூகத்தினருக்கு எஸ்.டி இடஒதுக்கீடு போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு உள்ளது என்பதை தெரிவிக்கவே எச்.எம். ரேவண்ணா கூட்டத்துக்கு சென்றார். அதே போல் எச்.எம். ரேவண்ணா உட்பட மடாதிபதிகள் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து பேசினர். சமூகத்தினரின் போராட்டம் என்பதால் அவரும் ஒப்புக்கொண்டார்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் டெல்லிக்கு சென்று சந்தோஷை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதை கவனிக்கும் போது குருபர் சமூகத்தினர் இடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சி நடப்பதாக தெரிகிறது. குருபருக்கு, நியாயமாக எஸ்.டி இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்றால் மாநில அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் செய்து அதை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இதற்காக நாங்கள் கூட டெல்லிக்கு வர தயாராகவுள்ளோம். இது தொடர்பாக பா.ஜவின் நிலை என்ன என்று அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும். அப்போது நாங்கள் எங்களுடைய போராட்டத்தை ஆரம்பிப்போம். அதை விட்டு சமூகத்தினர் இடையே பிரிவினை போன்ற செயலில் ஈடுப்படுவது எந்த அளவுக்கு நியாயம் என்று கேள்வி எழுப்பினார்.

Related Stories: