இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை: டெல்லியில் இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி டெல்லியில் இன்று துவக்கி வைக்கிறார். டெல்லி மெட்ரோ ரயில் சேவையை மேலும் நவீனப்படுத்தும் வகையில் ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ சேவை துவங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக டெல்லி மெட்ரோவில் மூன்றாவது விரிவாக்கத்தில் கட்டமைக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே இந்த தானியங்கி ரயில் சேவை செயல்படும். டெல்லி மெட்ரோவின் தொழில்நுட்ப வல்லுநர் குழுவை சேர்ந்தவர்கள் கமாண்ட் சென்டரில் இருந்து, ரயிலின் புறப்படும் நேரம், நிற்கும் நேரம், ரயிலின் வேகத்தை தீர்மானித்து இயக்கவுள்ளனர்.

கிழக்கு டெல்லியில் இருந்து மேற்கு டெல்லி வரை செல்லும் வழித்தடத்தில் இந்த தானியங்கி மெட்ரோ சேவைகள் பரிசோதனை செய்யப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளன. 7ம் எண் வழித்தடத்தில் முதற்கட்டமாக இந்த சேவை துவங்கப்படும் என்றும், இதன் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை கண்காணித்த பின் பிற வழித்தடங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் டெல்லி மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த வகை ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.

Related Stories: