புதுடெல்லி: ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற வீரர்களுக்கு கேன்டீன் மூலமாக மதுபானங்களும் விற்கப்படுகின்றன. இந்த சலுகையை மற்ற துணை ராணுவப் படைகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ -திபேத் எல்லை காவல் படை வீரர்களுக்கும் இணையதளம் மூலமாக மதுபானம் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இணையதளத்தை இந்தோ-திபெத் காவல் படை தலைவர் தேஸ்வால் நேற்று தொடங்கி வைத்தார்.