லண்டன் தவிர்த்து மற்ற நாடுகளில் இருந்த வந்த 38 ஆயிரம் பேரை கண்காணிக்கும் பணி தீவிரம்: அனைத்து மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு

சென்னை: லண்டன் தவிர்த்து மற்ற நாடுகளில் இருந்த வந்த 38 ஆயிரம் பேரை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. லண்டனில் உருவாகியுள்ள புதிய வகை கொரோனா தொற்று தொடர்பாக அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. இதில் சனிக்கிழமை வரை 13ேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் லண்டன் தவிர்த்து மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் பணியை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது :

கடந்த 15 நாட்களில் இதர நாடுகளில் இருந்த வந்த 38 ஆயிரம் பேரை கண்டறிந்து இவர்களை வீட்டு கண்காணிப்பில் வைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியல் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது.

புதிய வகை கொரோனா ெதாற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் இது போன்ற  தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: