குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் சனி பெயர்ச்சி விழா: பக்தர்கள் குவிந்தனர்

சின்னமனூர்: சின்னமனூர் அருகே குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் சனி பெயர்ச்சி விழா இன்று அதிகாலை கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குச்சனூர். இங்குள்ள சுரபி நதிக்கரையில் 500 ஆண்டு பழமைவாய்ந்த சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இங்கு சனிப்பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். சனிப்பெயர்ச்சியையொட்டி கடந்த 3 நாட்களாக யாக வேள்வி நடந்தது.

இன்று அதிகாலை 5.22க்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் இடம்பெயர்ந்தார். இடப்பெயர்ச்சியான சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதானை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. போடி டிஎஸ்பி பார்த்திபன், சின்னமனூர் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Related Stories: