எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்; உருமாற்றம் அடைவது கொரோனாவின் இயல்பு: பீதி அடைய தேவையில்லை

புதுடெல்லி: ‘கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவது இயல்பானதுதான். பொதுமக்கள் அதனால் அச்சம் கொள்ள வேண்டியதில்லை’ என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் சந்தீப் குலேரியா கூறியுள்ளார். இங்கிலாந்தில் மாற்றமடைந்திருக்கும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பீதி ஏற்பட்டுள்ளது. மீண்டும் பல நாடுகள் பகுதி நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.

இந்தியாவிலும் உருமாற்ற வைரஸ் பரவல் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைரஸ் உருமாற்றம் குறித்து எய்ம்ஸ் இயக்குநர் சந்தீப் குலேரியா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் ஏற்கனவே பல மாற்றங்களை அடைந்துள்ளது. சராசரியாக மாதம் இரண்டு முறை மாற்றமடைகிறது. எனவே, இந்த உருமாற்றம் என்பது கொரோனாவின் இயல்பான மாற்றம்தான். எனவே, பொதுமக்கள் பீதியடைய வேண்டியதில்லை.

ஏற்கெனவே தயாராகியுள்ள தடுப்பூசிகளின் திறனையும் இந்த கொரோனாவின் மாற்றம் பாதிக்காது. நாம் அளித்து வரும் சிகிச்சையிலும் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டியதில்லை. புதிய வைரஸில் பரவும் வேகம் மட்டுமே மாறியுள்ளது. பழைய கொரோனா வைரஸைக் காட்டிலும் 70 சதவிகிதம் வேகமாகப் பரவும் திறன் கொண்டுள்ளது புதிய வைரஸ். இதனால் உயிரிழப்புகள் எதுவும் அதிகரிக்கவில்லை என்பது நம்பிக்கைக்குரிய செய்தி. இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: