ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் குறித்து இன்று மாலை முடிவு!

ஆந்திரா: ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் குறித்து இன்று மாலை முடிவு அறிவிக்கப்படவுள்ளது. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக நேற்று நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருந்தாலும் கட்டுக்குள் இருப்பதாக ப்போலோ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: