தமிழகத்திலும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என நம்புகிறேன் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேச்சு!!

சென்னை : தமிழகத்திலும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என நம்புவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். முன்னதாக புதிய இந்தியா சமாச்சார், விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு போன்ற புத்தகங்களை மேடையில் பிரகாஷ் ஜவடேகர் அறிமுகம் செய்தார். இதையடுத்து இன்று காலை புதிய வேளாண் சட்ட மசோதாக்களை ஆதரித்து பாஜக சார்பில் மறைமலைநகரில் நடைபெற்ற விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து உரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய ஜவடேகர், ‘வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை.தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கான மற்றும் கேரள விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை. பஞ்சாப் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். வேளாண் சட்டங்கள் மூலம் அதிக பலன் பெறுவது பஞ்சாப் விவசாயிகள்தான்.  வேளாண் சட்டங்கள் தொடர்பாக ராகுல் காந்தியுடன் பொதுவெளியில் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன்,என்றார்.

இதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுத்துவிட்டார்சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக - பாஜக கூட்டணி பற்றிய கேள்விக்கும் பதில் அளிக்க மறுத்து விட்டார்.திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்தார்.

Related Stories: