தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜவடேகர் பதில் தர மறுப்பு..!!

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜவடேகர் பதில் தர மறுப்பு தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, முதல்வர் வேட்பாளர் என்று அதிமுக அறிவித்த நிலையில் பாஜக தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. என்.டி.ஏ. முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை தான் அறிவிக்கும் என்று அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். தமிழக பாஜக நிர்வாகிகளை தொடர்ந்து அமைச்சர் ஜவடேகரும் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா என்பது பற்றி கருத்து கூற மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: