ராமதாஸ் வலியுறுத்தல் கந்து வட்டி செயலிகளை தடை செய்ய வேண்டும்

சென்னை: ஆன்லைன் கந்து வட்டி செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ரூ.4,000 கடனை திரும்பச் செலுத்தாததற்காக ஆன்லைன் செயலி கந்துவட்டி நிறுவனம் அவமானப்படுத்தியதால், மனமுடைந்த மதுராந்தகத்தை சேர்ந்த விவேக் என்ற இளைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. ஆன்லைன் செயலி கந்துவட்டி நிறுவனங்களின் இந்த கொடுமையால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த செயலிகளை தடை செய்ய வேண்டும். எனவே இனியும் தாமதிக்காமல் கந்துவட்டி செயலிகளை தடை செய்ய வேண்டும். மேலும் தேசிய உழவர் நாள் இன்று (நேற்று) கொண்டாடப்படும் நிலையில் உழவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். அவர்கள் வாழ்வு வளம் பெற வேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன். உலகுக்கு உணவு படைக்கும் உழவர்களுக்கு பாமக எப்போதும் துணை நிற்கும்.

Related Stories: