10ம் வகுப்பு தேர்வு மார்ச் மாதம் நடத்தப்படாது: அமைச்சர் சுரேஷ்குமார் திட்டவட்டம்

பெங்களூரு:10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. தேர்வு மார்ச் மாதம் நடத்தப்படாது என்று அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார். பெங்களூருவில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்வி துறை அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. பள்ளி திறப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியான முறையில் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள குறைவான காலத்தில் முழு பாடங்கள் நடத்த முடியாத காரணத்தால் வரும் கல்வி ஆண்டில் 10-ம், பி.யூ.சி. தேர்வுகள் நடத்தப்படாது. அதே போல் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாடங்கள் இறுதி செய்யப்படும். குறைந்த அளவில் பாடம் படிக்க முன்னுரிமை வழங்கப்படும்.குறிப்பாக தேசிய அளவிலான தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வசதியாக அவர்களின் நலனை கருத்தில் கொண்டு சில நாட்களில் சரியாக முடிவு எடுக்கப்படும். அதே போல் கிராம பகுதிகளை சேர்ந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வித்யகாமா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வித்யகாமா திட்டத்தை தனியார் பள்ளிக்கூடங்கள் நடைமுறைப்படுத்திக்கொள்ள வேண்டும். தனியார் பள்ளிக்கூடங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்த மாநில அரசு சரியான முடிவு எடுத்துள்ளது என்றார்.

Related Stories: