மருத்துவமனையில் இருந்து நோயாளி வீசப்பட்ட விவகாரம் மருத்துவ கல்வி இயக்குநருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: அரசு மருத்துவமனையில் இருந்து தொழிலாளி தூக்கி வீசப்பட்டது பற்றி தினகரன் நாளிதழ் செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து மருத்துவ கல்வி இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மதுரையில் நடந்து வரும் பணியில் ஈடுபட்ட வடமாநில ெதாழிலாளி ஒருவர் தவறி விழுந்து கால் முறிந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு காலில் கம்பி பொருத்தி 205வது வார்டில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் வார்டுக்கு மாற்றப்பட்ட அவர், உதவியாளர் இல்லை என்பதால் ஊழியர்கள் வெளியே தூக்கி போட்டுள்ளனர். இதுபற்றிய செய்தி ‘தினகரன்’ நாளிதழில் படத்துடன் வெளியானது. இதையடுத்து, செஞ்சிலுவை சங்கத்தினர் மூலம் அவர் மீட்கப்பட்டு மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் தினகரன் செய்தி எதிெராலியாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட நோயாளி, அவரது வேலை, முகவரி , அவரிடம் விசாரணை நடத்தும் அதிகாரி, அவரது அறிக்கை உள்ளிட்ட தகவல்களுடன் 2 வாரங்களுக்குள் பதில் தர வேண்டும் என்று கீழ்பாக்கத்தில் உள்ள மருத்து கல்வி இயக்குநருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுபற்றி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: