புதுச்சேரியில் சமூக இடைவெளியுடன் புத்தாண்டை கொண்டாட அனுமதி: விடுதிகளில் 200 பேர் வரை அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரியில் சமூக இடைவெளியுடன் புத்தாண்டை கொண்டாட அனுமதி அளித்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். கடற்கரை சாலையில் பொதுமக்கள் முகக்கவசம் அனிந்து புத்தாண்டை கொண்டாடலாம் என கூறியுள்ளார். வரும் 2021 புத்தாண்டை புதுச்சேரி கடற்கரை மற்றும் விடுதிகளில் மக்கள் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் விடுதிகளில் 200 பேர் வரை புத்தாண்டு கொண்டாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டிச.31ம் தேதி இரவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு  தடை விதித்துள்ளது. கடற்கரைகள், சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை எனவும் கூறியுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரிக்கும் சூழல் ஏற்படும் என்பதால் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. டிச.31, ஜனவரி -1ம் தேதி பொதுமக்கள் கடற்கரையில் கூட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 31.12.2020 மற்றும் 1.1.2021 ஆகிய நாட்களில் பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: