ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க கருத்துகேட்பு தேவையில்லை என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு...! மத்திய அரசு பதிலளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க கருத்துகேட்பு தேவையில்லை என்ற உத்தரவு பற்றி பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 1ம் தேதிக்குள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.  ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அவசியமில்லை என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய சுற்றுச்சூழல் துறை பதிலளிக்குமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரியில்  வெளியிடப்பட்ட அறிவிப்பாணையின்படி, ஹைட்ரோகார்பன் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள அமைக்கப்படும் ஆய்வுக் கிணறுகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்பதோடு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வும், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டமும் அவசியமில்லை. இந்த திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது மத்திய சுற்றுச்சூழல் துறை பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், வழக்கு விசாரணையை பிப்ரவரி 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related Stories: