காலை 11 மணிக்கு காணொலி மூலம் அலிகர் முஸ்லிம் பல்கலை. நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. அந்த விழாவில் பிரதமர் மோடி காலை 11 மணியளவில் கலந்துக் கொண்டு காணொலி வாயிலாக உரையாற்றுகிறார். மேலும் அந்த நிகழ்ச்சியில் ஒரு தபால் தலையையும் அவர் வெளியிடுகிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்கலைகழகத்தின் வேந்தர் சையேத்னா முஃபதல், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பங்கேற்க உள்ளனர். இந்த பல்கலைக்கழக விழாவில் 1964ஆம் ஆண்டுக்கு பிறகு கலந்து கொள்ளும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பல்கலைகழகமானது உத்தரப்பிரதேசத்தின் அலிகர் நகரில் அமைந்துள்ளது. கேரள மாநிலம் மல்லபுரம், மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் ஜங்கிபூர், பிகார் மாநிலம் கிஷன்கஞ் ஆகிய மூன்று இடங்களில் இயங்கி வருகின்றன. நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் தனது 100 வது  ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. 1964 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி கலந்து கொண்டார்.

அதன் பின் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். முகம்மது ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரி 1875 ஆம் ஆண்டில் சர் சையத் அகமது கான் அவர்களால் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜில் பார்த்ததைப் போல அமைக்கப்பட்டது. 1920 ஆம் ஆண்டில், இது அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் என மறுபெயரிடப்பட்டது.

Related Stories: