30,000 காலி பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப முயற்சிப்பதாக கூறி மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

சென்னை: முற்பதாயிரம் காலி பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப முயற்சிப்பதாக கூறி கோவை மண்டலா மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்திலும், சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்திலும்  ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தின் 3 வாயில்களும்  மின்வாரிய ஊழியர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இன்று அனைவரும் விடுப்பு எடுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று யாரும் பணிக்கு செல்லவில்லை. இந்த போராட்டமானது மின்வாரியத்தின் துணைக்கோட்ட அளவில் மேற்பார்வை பொறியாளர்களுக்கு கீழே 3 ஆண்டுகளுக்கு 20 ஊழியர்களை தனியார் நிறுவனங்களோடு ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்திக்கொள்ளலாம் என்ற உத்தரவை தமிழ்நாடு மின்சாரவாரியம் தற்போது அறிவித்துள்ளது.

இது ஏற்கனவே பணி நிரந்தரம் கோரி காத்திருக்கும் பல்வேறு மின்வாரிய ஊழியர்களுக்கு எதிராக இருப்பதாக மினி வரியா தொழிற் சங்கங்களின் கூட்டுக்குழு கருதுகிறது. எனவே இந்த ஆணையை திரும்ப பெற வேண்டும் என்றும், இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்தால் தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மையம் ஆகிவிடும் என்ற அச்சத்தாலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு நிர்வாகிகள் கூறுகையில், இந்த திட்டம் நடைமுறை படுத்தப்பட்டால் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவதற்கான வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் வேலைநிரந்தரம் இல்லாமல் போய்விடும் என்பதாலும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கூறுகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் மின்சார வாரியத்தில் லஞ்சம் ஊழல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இன்றைக்கு இருக்க கூடிய மின்வாரிய தலைவர் தொழிற் சங்கங்களுக்கும் மின்சார வாரியத்திற்கும் இடையில் இருக்க கூடிய நல்லுறவை கெடுக்கும் வகையில் பல்வேறு செயல்களை செய்வதாக கூறுகின்றனர். இந்த உத்தரவு திரும்ப பெரும்வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் கூறுகின்றனர்.

Related Stories: