ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் கட்டிடங்களாக மாறிய நீர்நிலையை மீட்போம்: கமல் பேச்சு

சென்னை; ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் கட்டிடங்களாக மாறிய நீர்நிலையை மீட்போம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறினார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் சென்னை மாநகராட்சியினர் மேற்கொண்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்

அப்பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நேற்று மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டார். பின்னர், அப்பகுதியினரிடையே பேசிய அவர்,  ‘‘தமிழக முதல்வர், குடிமராமத்து பணிகள் மேற்கொள்வதை ஒரு சாதனையாக கருதுகிறார். ராஜராஜ சோழன் மற்றும் நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட நீர் நிலைகளை மீட்டெடுப்பது மக்கள் நீதி மய்யத்தின் கடமை.

தமிழகத்தில் ஆட்சி செய்பவர்களுக்கு, இது போன்ற கடமைகள் எதுவும் இல்லை என்பது இங்கு அமைக்கப்பட்டிருக்கும் மழைநீர் வடிகால்களே சாட்சியாக உள்ளது. ஜெர்மன் நாட்டு வங்கி கடனுதவியுடன் நடைபெற்று வரும் இந்த மழைநீர் வடிகால் பணி தரமற்றதாகவுள்ளது. இதுவரை ஆட்சியாளர்களால் கட்டிடங்களாக மாறிய நீர் நிலைகளை மீட்டெடுப்பது மக்கள் நீதி மய்யத்தின் உறுதிமொழியாக உள்ளது’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: