உயர பறக்கும் சூர்யா, தனுஷ்..! கோல்டன் குளோப் விருதுகள் விழாவில் சூரரைப்போற்று, அசுரன்

சென்னை: 78-வது கோல்டன் குளோப் விருதுகள் விழாவில் தமிழில் சூரரைப்போற்று, அசுரன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நவம்பர் 12-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘சூரரைப்போற்று’. அதேபோல் திரையரங்கில் வெளியான அசுரன் திரைப்படமும் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த இந்தப் படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: