மராட்டிய மாநிலத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்; உத்தவ் தாக்கரே

மும்பை: மராட்டிய மாநிலத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மாநிலத்தில் கொரோனா வைரஸ் முழுமையாக நீங்கிவிட்டது எனச் சொல்லமுடியவில்லை. ஆனால், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. வருமுன் காப்பதே சிறந்தது.  எனவே, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது குறைந்தது இன்னும் ஆறு மாதங்களுக்கு ஒரு பழக்கமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: