சாமை தினை அரிசி அடை

எப்படிச் செய்வது:

வாணலியில் தினை, சாமை அரிசிகள், சீரகம், உளுந்து, மிளகை போட்டு மிதமான தீயில் வறுக்கவும். கருகாத பக்குவத்தில் எடுத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் அரிசி கலவையில் இட்டு, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை பக்குவத்தில் கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அடையாக ஊற்றவும். சாமை தினை அரிசி அடை ரெடி.