ஒரு சில மண்டலங்களில் மட்டுமே முன்பதிவில்லாத டிக்கெட் வழங்க உத்தரவு: ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தின் ஒரு சில ரயில்வே மண்டலங்களில் இயங்கும் பயணிகள் ரயில்களில் முன்பதிவில்லாத பயணச் சீட்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் மார்ச் 24ம் தேதி முதல் கொரோனா காரணமாக ஊரடங்குஅறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 304 மின்சார ரயில்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் மற்றும் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பண்டிகை சிறப்பு ரயில் உள்ளிட்ட அனைத்து சிறப்பு மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் முன்பதிவுடன் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளும் அனுமதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘முறையான அறிவிப்புகள் வரும் வரை பண்டிகை விடுமுறை உள்ளிட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகியவை இன்றைய தேதிகளில் முன்பதிவின் அடிப்படையில் இயங்கப்படுகிறது. அதுபோலவே இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு பயணச்சீட்டுடன் மட்டுமே தரப்படுகிறது. மேலும் புறநகர் மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒருசில மண்டலங்களில் இயங்கும் பயணிகள் ரயில்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளை வழங்க மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: