வானம் வெளிச்சமாக இருந்தும் 3.8 டிகிரியில் உறைந்தது டெல்லி

புதுடெல்லி: மேக மூட்டமின்றி வானம் தெளிவாகவும், நல்ல சூரிய வெளிச்சம் இருந்தும் தலைநகரை பனிப்பொழிவு 4 டிகிரி செல்சியசில் கிடுகிடுக்கச் செய்துள்ளது. வானிலை குறித்த இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை விவரம்: சப்தர்ஜங் ஆய்வு மையத்தில் பதிவான குளிர் அளவு 4.6 டிகிரி செல்சியஸ். இமயமலை மேற்கில் இருந்து புறப்படும் பனிக்காற்று, தீவிரம் குறையாமல் டெல்லியில் வீசுவதால் குறைந்தபட்ச வெப்பநிலை உறைபனி நிலையை எட்டும் அளவில் கடுமையாக உள்ளது. அய நகர் மற்றும் ரிட்ஜ் பகுதிகளில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 3.8 மற்றும் 3.5 டிகிரி செல்சியஸ். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் என குறைந்தபட்ச அதிகளவு நிலையில் தாழ்ந்துள்ளது. காற்று தரம் குறியீடு மோசம் பிரிவில் தொடர்ந்து நீடிக்கிறது. நேற்று காலை 11 மணிக்கு பதிவான நிலவரப்படி காற்று தரம் குறியீடு 248 ஆக உள்ளது.

Related Stories: