டாஸ்மாக் கடைகளை காலி செய்து கட்டிடங்களை ஒப்படைக்க கோரி உரிமையாளர்கள் போராட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார் உரிமையாளர்களிடம், கட்டிட உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழ்நாடு மதுக்கூட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் மதுக்கூட ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று எழுப்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடந்தது. சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதையடுத்து, சங்கத் தலைவர் அன்புச்செல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நவம்பர் மாதம் 30ம் தேதி டாஸ்மாக் அலுவலகம் முன்பாக திரண்டு போராட்டம் நடத்திய போது விரைவில் டாஸ்மாக் பார்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்கள். ஆனால், இதுவரையில் எந்தவித அறிவிப்பும் வரவில்லை. எனவே, எங்கள் கட்டிடத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை காலி செய்து, வைப்புத்தொகையை உடனே திருப்பித்தர வேண்டும் என்றார்.

Related Stories: