சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி சஞ்சிப் பானர்ஜி நியமிக்கப்படுகிறார்: உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள சஞ்சிப் பானர்ஜி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்துவரும் ஏ.பி.சாஹி வரும் 31ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்துள்ளது.

மேலும், ஆந்திர மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மகேஸ்வரியை சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.கோஸ்வாமி ஆந்திரபிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்படவுள்ளார்.  தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எஸ்.

சவுகான் உத்தரகாண்ட் தலைமை நீதிபதியாகவும், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஹிமா ஹோலி தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இதில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related Stories: