இந்தியா அடுத்த அதிரடி: சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தடை

புதுடெல்லி: லடாக் எல்லையில் சீனாவுடன் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, அந்நாட்டின் 200க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு (ஆப்கள்) இந்தியா தடை விதித்து அதிர்ச்சி அளித்தது. இதன் அடுத்த கட்டமாக, சீனாவின் தொலைத்தொடர்பு சாதனங்களை விற்பனை செய்யும் மற்றும் அது சம்பந்தப்பட்ட சேவைகளை அளிக்கும்  நிறுவனங்களுக்கும் இந்தியாவில் தடை விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது பற்றி பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘நாட்டின் தொலைத்தொடர்பு துறையின் பாதுகாப்பு கருதி, நம்பகத்தன்மையுள்ள நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே தொலைத்தொடர்பு சாதனங்களையும், சேவைகளையும் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அப்படிப்பட்ட நம்பகத்தன்மை உள்ள நிறுவனங்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.’’ என்றார். இந்த நடவடிக்கையின் மூலம், சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

Related Stories: