அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்...!! உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 7.37 கோடியாக உயர்வு; 16.40 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16.40 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,640,046 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 73,759,994 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 51,778,971 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,06,438 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் இன்னும் உலகின் பல நாடுகளையும் பாடாய்ப்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு நிரந்தர முடிவு கட்டுவது தடுப்பூசிதான் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது.

எனவே கொரோனா தடுப்பூசியை மக்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. இந்நிலையில்,  உலகளவில் 7.37 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 5.17 கோடி பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் 16.40 லட்சம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.  5 கோடியே 17 லட்சத்து 43 ஆயிரத்து 888 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். அமெரிக்காவில் புதிதாக 1.90 லட்சம் பேருக்கு  புதிதாக கொரோனா ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,716 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 1.71 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3.10 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: