ஸ்டார் 2.0 திட்டத்தில் 21,341 ஆவணம் பதிவால் ரூ.110.14 கோடி வருவாய்: பதிவுத்துறை சாதனை

சென்னை: பதிவுத்துறையில் ஸ்டார் 2.0 மென்பொருள் கடந்த 12ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டார் 2.0வில் அதிகப்படியாக பதியப்பட்ட ஆவணங்களில் கடந்த அக்டோபர் 29ம் தேதி 20,307, செப்டம்பர் 14ம் தேதி 19,769, 2019 செப்டம்பர் 16ம் தேதி 19,681, செப்டம்பர் 4ம் தேதி 18,967, பிப்ரவரி 26ம் தேதி 18,703, செப்டம்பர் மார்ச் 13ம் தேதி 18,674, செப்டம்பர் 12ம் தேதி 18,581, டிசம்பர் 10ம் தேதி 18,559, 2018 செப்டம்பர் 12ம் தேதி 18009, அக்டோபர் 28ம் தேதி 17,861 ஆவணங்கள் வரை பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பதிவுத்துறை ஐஜியாக சங்கர் பொறுப்பேற்றதும் பதிவுத் துறையில் அதிகமான ஆவணங்கள் பதிவு செய்து அரசுக்கு வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் அதிகப்படியான ஆவணங்கள் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளருக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கியும், சார்பதிவாளர் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இதையடுத்து நேற்று அதிக அளவில் பதிவுகள் வரும் என்பதை எதிர் பார்த்து 25 சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதலாக 25 உதவியாளர்களை கூடுதல் பதிவு அலுவலராக நியமித்து கூடுதலாக முன்பதிவு டோக்கன் வழங்கப்பட்டு காலை முதல் கண்காணித்து வந்ததால் நேற்று மட்டும் 21,341 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.110.14 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இது தான் ஸ்டார் 2.0 திட்டம் தொடங்கிய பிறகு நடைபெற்ற அதிகபட்ச பதிவாகும்.

Related Stories: