ஆர்டிஜிஎஸ் முறையில் 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி அமல்: சேவை குழுவினருக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் வாழ்த்து.!!!

மும்பை: ஆர்டிஜிஎஸ் முறையில் 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி அமலுக்கு வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார். ஆர்டிஜிஎஸ் முறை என்பது மிகப்பெரிய தொகையை ஒரு வங்கியில்  இருந்து, அதே வங்கியின் வேறொரு கிளைக்கும், மற்ற வங்கிகளுக்கும் அனுப்ப பயன்படுத்தப்படுவது. ரூ.2 லட்சத்திற்கு மேல் பணம் அனுப்புவதற்கு, இந்த முறைதான் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, ஆர்டிஜிஎஸ் முறை என்பது வங்கியின்  வேலைநாட்களில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் இந்த சேவையை வங்கிகள் அளிப்பதில்லை.

இதற்கிடையே, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ், நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஆர்டிஜிஎஸ் முறை நாளை இரவு 12:30 மணி முதல் 24 மணி நேரமும் செயல்படும். இதனை சாத்தியாக்க பணியாற்றிய ரிசர்வ்  வங்கி, ஐஎப்டிஏஎஸ்(Indian Financial Technology and Alied Services) மற்றும் உடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி. அதிகளவு பணத்தை 24 மணி நேரமும் வருட முழுவதும் 365 நாட்களும் அனுப்பும் முறையை செயல்படும். சில நாடுகளில்  இந்தியாவும் ஒன்று. இதன் மூலம் தொழில் செய்யும் எளிதாகும் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஆர்டிஜிஎஸ் முறையில் 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி அமலுக்கு வந்துள்ளது. ரிசர்வ் வங்கி, இந்திய  தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்பான சேவைகள் பிரிவின் குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்தில், ஆர்டிஜிஎஸ் முறை 24 மணி நேரமும் செயல்படுவது  டிசம்பர் மாதம் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: