67 ஆண்டுகளுக்கு பின் ஏர் இந்தியாவை கைப்பற்ற இருக்கும் டாடா?.. 51% பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்

டெல்லி: டாடா குழுமம் 67 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக 1932-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்டது. பின்னர் அதன் பெயரை 1946-ல் ஏர் இந்தியா என டாடா குழுமம் மாற்றியது. 1963-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான நிறுவனம் அரசுடமை ஆக்கப்பட்டது. 1995-ல் விமான நிறுவனம் தொடங்கும் முயற்சி தோல்வியில் முடிய 2001-ல் ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது. ஆனால் இந்த துறையில் இருந்து பின்வாங்காத டாடா குழுமம், 2013 முதல் ஏர் ஏசியா இந்தியா மற்றும் விஸ்தாரா என என 2 விமான நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளது.

இந்த நிலையில் 52 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கி இருக்கும் ஏர் இந்தியாவை மீண்டும் கைப்பற்ற டாடா குழுமம் முன்வந்துள்ளது. ஏர் இந்தியாவை வாங்கும் ஏல நடவடிக்கையில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள். இதுவரை டாடா, அதானி, ஹிந்துஜா குழுமங்கள் ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் இணைந்து டாடா குழுமம் ஏர் இந்தியாவின் 51% பங்குகளையும் வாங்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: