காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறைக்காவலர்களுக்கான எழுத்து தேர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 மையங்களில்  தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவலர் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் 1739 பெண்கள் உள்பட 11,883 பேர் தேர்வு எழுதினர்.

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 10,906 இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்படப்பை ஆல்வின் இன்டர்நேஷனல் பள்ளி, காரைப்பேட்டை பக்தவச்சலம் பாலிடெக்னிக், ஓரிக்கை பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட 10 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு எழுத 1960 பெண்கள் உள்பட 13339 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1739 பெண்கள் உள்பட 11,883 பேர் தேர்வில் கலந்துகொண்டனர். 1456 பேர் தேர்வு எழுத வரவில்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் டிஐஜி சாமுண்டீஸ்வரி தலைமையில் எஸ்பி சண்முகப்பிரியா  மற்றும் காவல்துறை அதிகாரிகள் தேர்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் எஸ்.ஆர்.எம். கலை மற்றும் பொறியியல் கல்லூரி மண்ணிவாக்கம் பெர்ரி கல்லூரி தாகூர் ,வண்டலூர் கிரசன்ட்  கற்பகவிநாயகா கல்லூரி என 6 மையங்களில் ஆண்கள், பெண்கள் என 6133 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 747 பேர் தேர்வு எழுத வரவில்லை 5386 பேர் தேர்வு எழுதினர் தேர்வு கண்காணிப்பு பணியில் செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Related Stories: