ஜம்முவில் தேர்தல் 6ம் கட்ட வாக்குப்பதிவு மந்தமாக நடந்தது

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு, உள்ளாட்சிக்கான மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தலில், நேற்று 6ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. அதிகமான பனிப்பொழிவும், குளிரும் வாட்டியதால்,  மக்கள் குறைந்தளவே வந்து வாக்களித்தனர். நேற்று மதியம் ஒரு மணியளவில் 42.79 சதவீத வாக்குகள் பதிவானது.  நவம்பர் 28ம் தேதி தொடங்கிய இத்தேர்தல், டிசம்பர் 19ம் தேதி நிறைவடைகிறது. டிசம்பர் 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

Related Stories: