மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள தீ தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாத 1,100 கடைகளுக்கு நோட்டீஸ்

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள தீ தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாத 1,100 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மதுரையில் 2 தீயணைப்பு வீரர்கள் இறந்த சம்பவம் எதிரொலியாக 1,100 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இடியும் தருவாயில் உள்ள 5 கட்டிடங்களுக்கு தீயணைப்புத் துறை சீல் வைத்தது. தெற்கு வாசல் பகுதியில் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கச் சென்றபோது 2 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கான நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க எத்தனை நாள் ஆகும்? மதுரையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் தொடர்ந்த வழக்கில் அரசு பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

2018ல் நடைபெற்ற தீ விபத்தில் வீர வசந்த ராய மண்டபத்தின் தூண்கள், கூரை சேதமடைந்தன என மனுதாக்கல் செய்யப்பட்டது. தீ விபத்தை அடுத்து மீனாட்சி அம்மன் கோயில் வாகன நிறுத்தத்தில் தற்காலிக தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. தற்காலிகமாக செயல்படும் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரர்கள் அமர கூட இடமில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்த ராய மண்டப பணியை மேற்கொள்ளவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனுதாரர் இஸ்லாமியராக இருந்தாலும் பழமையான கோயில் மீது அக்கறை கொண்டுள்ளதாக நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: