சாலையை பல நாட்களாக ஏன்? சரி செய்யவில்லை: சென்னை மதுரவாயல்- வாலாஜா சாலையில் 50% மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் உத்தரவு.!!!

சென்னை: சென்னை மதுரவாயல்- வாலாஜா சாலையில் 50% மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரவாயல்- வாலாஜா  வரையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வந்தபோது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போடும் சாலைகள் அனைத்தும் இந்திய சாலை காங்கிரஸ் தரத்தில் இல்லை. பழுதடைந்த நிலையில் உள்ள மதுரவாயல்-வாலாஜா நெடுஞ்சாலையை பல நாட்களாக ஏன்? சரி செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 புகைப்படம் தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக்கூடாது என்று கேள்வி எழுப்பியது. சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு 520 விபத்துகள் நடக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது. சாலை விபத்து வழக்குகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மாநில நெடுஞ்சாலை ஆணையத்தையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.  

இதற்கு, மதுரவாயல்-வாலாஜா நெடுஞ்சாலை 10 நாட்களில் பழுது பார்க்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து, மதுரவாயல்- வாலாஜா இடையேயான 2 சுங்கச்சாவடிகளில் 2 வாரத்துக்கு 50% சுங்கக் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை  டிசம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related Stories: