விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: “பாரத் பந்த்” நடத்தின. இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் குறிப்பாக பஞ்சாப், அரியானா போன்ற மாநில விவசாயிகள் இந்த வேளாண் சட்டங்கள் அவர்களின் விவசாய வழிமுறைகளுக்கு தடங்கலாக இருக்கும் என கருதியதால் அவர்களுக்கு சந்தேகமும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் மற்ற மாநில விவசாயிகளுக்கு அச்சமும், சந்தேகமும் ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே, மத்திய அரசு 9ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஒட்டு மொத்த இந்திய விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலே, அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, அச்சத்தை போக்கி, மத்திய அரசு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

Related Stories: