ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு திட்ட பணிகள்: 3ம் நபர் குழு ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள் உள்ளன. தற்போது ஊராட்சிகளில் ஜல் ஜீவன் மிஷன் எனும் மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் தனி குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணிகள்  தீவிரமாக நடக்கிறது. தனியாக குடிநீர் இணைப்பு பெறாத வீடுகளை கணக்கெடுத்து, அவர்களது குடிநீர் தேவைக்கு ஏற்றவாறு அப்பகுதியில் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீர் பைப் லைன் அமைத்தல்  உள்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. இப்பணிகளை திட்ட குழுவின் 3ம் நபர் ஆய்வு குழு உறுப்பினர் சீனிவாசன் மற்றும் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது திட்டத்தின் செயல்பாடுகள் எந்த அளவில் உள்ளது, ஆழ்துளை  கிணற்றுக்கும் வீடுகளுக்கும் எவ்வளவு தூரம் உள்ளது.

குடிநீர் தேவைக்கு ஏற்ப ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். இதில் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவ.தினகரன், பிச்சியம்மாள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வல்லவன், ஒன்றிய  பொறியாளர்கள் மாரி செல்வம், சசிகலா, சகுந்தலா தேவி, பணி மேற்பார்வையாளர் கவாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: