கோயில் நிலங்களை அரசு துறைகளுக்கு விற்க தடை நிலங்களை குத்தகை விடுவதற்கு ஆணையர் ஒப்புதல் அவசியம்: மண்டல இணை ஆணையர்களுக்கு அறிவுரை

சென்னை:  கோயில் நிலங்களை அரசு துறைகளுக்க விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக  இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில்  உள்ள கோயில் நிலங்கள் அரசு துறைகளுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 14.9 ெஹக்டேர் நிலத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வருவாய்த்துறைக்கு விற்க முடிவு செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததால் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்காக கோயில் நிலங்களை குத்தகைக்கு விட அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், கோயில் நிலங்களை குத்தகைக்கு விடுவது தொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனையின் பேரில், இனி வருங்காலங்களில் கோயில் நிலங்களை அரசு துறைகளுக்கு விற்பனை செய்ய வேண்டாம் என்றும் குத்தகைக்கு விடுவதாக இருந்தால் கூட ஆணையர் அலுவலகத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே, பல்வேறு அரசு துறைகளுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலங்களை மீட்பது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: