இந்தியாவில் மேலும் 36,652 பேர் பாதிப்பு: நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 96.08 லட்சத்தை தாண்டியது: இதுவரை 94.20% பேர் குணம்.!!!

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 96.08 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 36,652 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 96,08,211 ஆக உயர்ந்தது.

* புதிதாக 512 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,39,700 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 42,533 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 90,58,822 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,09,689 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 94.20% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.45% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.35% ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 11,57,763 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 14,58,85,512 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Related Stories:

>