காஞ்சி மாவட்டத்தில் உள்ள பழஞ்சூர், பாப்பன்சத்திரம் கிராமங்களை திருவள்ளூர் மாவட்டத்தில் இணைக்க வேண்டும்: கலெக்டரிடம் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கோரிக்கை

திருவள்ளூர்:  கலெக்டர் பா.பொன்னையாவிடம், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கொடுத்த கோரிக்கை மனு:அதன் விவரம்: கடந்ந 1997ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஒன்று காஞ்சிபுரம் மாவட்டமும் மற்றொன்று திருவள்ளூர் மாவட்டமாக  அறிவிக்கப்பட்டது. அப்போது பழஞ்சூர், பாப்பன்சத்திரம் கிராமங்கள் அந்த அரசாணையில் வரிசை எண் 31 ஆகவும், பூந்தமல்லி தாலுகாவில் பழஞ்சூர் பாப்பன்சத்திரம் கிராமங்கள் வரிசை எண் 13 ஆகவும் இடம்பெற்றது. நிலம் சம்பந்தப்பட்ட வருவாய் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் சம்பந்தப்பட்டவை மட்டும் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் தாலுகாவில் இணைக்கப்பட்டது. தேர்தல்கள் மற்றும் அனைத்து துறைகளும் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுகாவில் உள்ளது. எனவே பழஞ்சூர், பாப்பன்சத்திரம் கிராமங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்திலிருந்து பழஞ்சூர், பாப்பன்சத்திரம் கிராமங்களை திருவள்ளூர் மாவட்டத்தில் முழுமையாக இணைக்க வேண்டும்.

Related Stories:

>