ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகளில் கணிசமான நீர்வரத்து

காஞ்சிபுரம்: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 545 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மாவட்டத்தின் முக்கியமான 16 ஏரிகளில் கணிசமான நீர் உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சிறியதும், பெரியதுமாக 909 ஏரிகள் உள்ளன. இதில் வையாவூர், நத்தப்பேட்டை, எறையூர் தேவனேரி, தாத்தனூர், குண்டுப் பெரும்பேடு உள்பட மொத்தம் 545 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இதேபோல் 269 ஏரிகளில் 75 சதவீதத்திற்கு அதிகமாகவும், 95 ஏரிகளில் 50 சதவீதத்திற்கு அதிகமாகவும் நீர் நிரம்பி உள்ளது. மாவட்டத்தில் முக்கிய ஏரிகளான தாமல் ஏரிக்கு கணிசமான நீர்வரத்தும், தென்னேரி ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி , மணிமங்கலம் ஏரிகளில் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் இந்தாண்டு விவசாயத்துக்கு போதுமான நீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.    

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீராதாரமாகவும், விவசாயத்துக்கு பயன்படும் 16 முக்கியமான ஏரிகளில் தற்போதைய நீர் இருப்பு     

ஏரிகள்    ஆயக்கட்டு (ஏக்கர்)    கொள்ளளவு (அடி)    தற்போதைய

நீர் இருப்பு காஞ்சிபுரம் மாவட்டம்

தாமல்        2307    18.60    14.50

தென்னேரி        5858    18.00    18.00

உத்திரமேரூர்    5636    20.00    9.50

பெரும்புதூர்    1423    17.60    16.88

பிள்ளைப்பாக்கம்    1096    13.20    12.32

மணிமங்கலம்    2079    18.40    18.40

செங்கல்பட்டு மாவட்டம்

கொளவாய்        627    15.00    14.50

பாலூர்        2547    15.30    6.00

பி.வி.களத்தூர்    1224    15.00    14.00

காயார்        1178    15.70    15.70

மானாம்பதி    1091    14.10    13.50

கொண்டங்கி    1529    16.11    14.50

சிறுதாவூர்        1027    13.60    13.60

தையூர்        1879    13.90    13.90

மதுராந்தகம்    2853    23.30    23.30

பல்லவன்குளம்    2165    15.70    8.20

Related Stories:

>