தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.360 ஆக உயர்ந்து, ரூ.37,248 விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கடந்த மாதம் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்பு வரலாறு காணாத அளவில் தங்கம் விலை உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சவரன் தங்கம் ரூ.36,256 வரை குறைந்தது. இதனால் நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தங்கம் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், கடந்த 4 நாட்களாக தங்கம் விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.85ம், சவரனுக்கு ரூ.680ம் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.36,888க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று காலை மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.30ம், சவரனுக்கு ரூ.240ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4641க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.37,128க்கும் விற்பனையானது. அதை தொடர்ந்து மாலையில் மீண்டும் கிராமுக்கு ரூ.45 விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,656க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.37,248க்கும் விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோருக்கு சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>