வரும் கல்வி ஆண்டு முதல் தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி பயில குழு அமைப்பு: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: வரும் கல்வியாண்டு முதல் தாய்மொழி வழியில் தொழில்நுட்ப கல்வி பயில உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று  தெரிவித்துள்ளார்.  கடந்த 26ம் தேதி மத்திய கல்வித்துறை அமைச்சகம் தரப்பில் டெல்லியில் முக்கிய கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, வரும் கல்வி ஆண்டு முதல்  பொறியியல் உட்பட தொழில்நுட்பம் அதாவது ஐ.ஐ.டி படிப்புகளை மாணவர்கள் அவர்களின் மாநில தாய்மொழியில் பயிலும் நடைமுறையை கொண்டு வருவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

மேலும் இந்த புதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும்போது ஏற்படும் சிக்கல்கள், வினாத்தாள்கள் எப்படி தயார், பிரந்திய மொழியில் மொழி சிலபஸ்களை மொழிமாற்றம் செய்யும் போது ஏற்படும் பிரச்னைகள் ஆகியவை குறித்த  அடுத்தக்கட்ட வரையறைகளை மேற்கொள்ளவும் கூட்டத்தின் போது தேசிய தேர்வு முகமைக்குக்கும் அமைச்சகத்தின் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   இந்த நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அளித்த  பேட்டியில்,வரும் கல்வியாண்டு முதல் தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி என்ற விவகாரத்தில் மொழி திணிப்பு என்பது யார் மீதும் இருக்காது. குறிப்பாக இந்த புதிய திட்டத்தின் முறையை செயல்படுத்த புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.  இது உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் தான் செயல்படும்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: