4ம் தேதி வரை ஆண்களுக்கான நவீன கருத்தடை முகாம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: ஆண்களுக்கான நவீன கருத்தடை முகாம் 4ம் தேதி வரை நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம்கள் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன்படி பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சஞ்சீவராயன் பேட்டை நகர்புற சமுதாய நல மையம், புளியந்தோப்பில் உள்ள நகர்புற சமுதாய நல மையம், அடையாறு வெங்கடரத்னம் நகரில் உள்ள நகர்புற சமுதாய நல மையம் ஆகிய 3 மைங்களில் இந்த முகாம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார். இணை ஆணையர் திவ்யதர்ஷினி, மாநகர மருத்துவ அலுவலர் ஹேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சிகிச்சை முகாமில் நவீன கருத்தடை செய்துகொள்ளும் நபர்களுக்கு ரூ.1100 மற்றும் ஊக்குவித்து அழைத்து வரும் நபருக்கு ரூ.200 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

Related Stories:

>