எவ்வளவு கொட்டித் தீர்த்தாலும் ஒவ்வொரு ஆண்டும் வீணாகும் மழைநீர்: காரணம் யார்? அரசா, மக்களா?

ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களின்போது கிடைக்கும் மழைநீரை சேகரித்து வைக்க போதிய நீராதாரங்கள் இல்லாததால், சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள ஆறு, ஏரி, குளம் போன்றவற்றில் இருந்து தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. நிவர் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட பல மாவட்டங்களில் கடந்த 26ம் தேதி மழை பெய்தது. இதில், தாம்பரத்தில் 310 மி.மீ, சென்னை டிஜிபி அலுவலகம் 260 மி.மீ, சோழிங்கநல்லூர் 220 மி.மீ, அம்பத்தூர் 150 மி.மீ, தரமணி 100 மி.மீ என சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.

நிவர் புயல் காரணமாக சராசரியை விட கூடுதலாக மழை பதிவாகியும், நீர் வழித்தடங்களில், மழைநீர் வெள்ளமாக கடலுக்கு பாய்ந்த நிலையிலும், கூவம், அடையாறு ஆறுகள், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாகவும், கடந்த 26ம் தேதி 10 டி.எம்சி மழைநீர், கடலில் வீணாக கலந்துள்ளது. ஆனால், நீர்நிலைகளில், 50 சதவீதத்திற்கும் மேல் இன்னும் நிரம்பவில்லை. இதற்கு, மழைநீர் வடிகால்கள் மற்றும் போக்கு கால்வாய், நீர்வரத்து கால்வாய்களை, முறையாக நீர்நிலைகளுடன் இணைக்காதது முக்கிய காரணம்.

மக்கள் தாங்களாகவே முன்வந்து வீடுகளிலும் குடியிருப்புகளை ஒட்டிய பொது இடங்களிலும் மழைநீர் சேமிப்பு திட்டத்தை செம்மையாக செயல்படுத்தியிருந்தால் அதிக மழைநீரை நிலத்தடியில் சேமித்து, வீணாவதை தவிர்த்திருக்க முடியும். மழை நீரை நிலத்தடியில் சேமித்து வைக்க முடியாமல் வீணடிப்பதில் அரசுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு பொதுமக்களுக்கும் பங்கு இருக்கிறது. மழைநீர் சேகரிப்பில் ஆர்வமும், அக்கறையும் இல்லதாததே இதற்கு முக்கிய காரணம். ஆண்டுதோறும் மழைநீர் வீணாவது குறித்தும் அதை தடுக்கும் வழிகள் குறித்தும் நான்கு கோண பார்வைகள் இங்கே:

Related Stories: