மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுமா?

மதுரை: மதுரை, மாகாளிபட்டியைச் சேர்ந்த மணிபாரதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நம் நாட்டில் 2.68 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களின் குறைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க 2017ல் விதிகள் உருவாக்கப்பட்டது.

ஆனால், இதுவரை சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை. எனவே, மாவட்டந்தோறும் சாய்வுதள வசதியுடன் கூடிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், அங்கு ேதவையான அரசு சிறப்பு வக்கீல்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் மனுவிற்கு மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: