ஊரடங்கிற்கு முந்தைய நிலையை எட்டியது கிரெடிட் கார்டு தேவை கிடுகிடு விண்ணப்ப எண்ணிக்கை உயர்வு

புதுடெல்லி: சிபில் நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, கடந்த அக்டோபர் மாதம் புதிய கிரெடிட் கார்டு கோரி வந்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை, 2019ம் ஆண்டு அக்டோபரை விட 106 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, மெட்ரோ அல்லாத நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் கிரெடிட் கார்டு தேவைப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது என தெரிய வந்துள்ளது.

 வங்கிகளுக்கு கிரெடிட் கார்டு கோரி விண்ணப்பம் செய்யும்போது, ஒவ்வொரு விண்ணப்பமும் சிபில் ஸ்கோர் கேட்டு, சிபில் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது. ஊரடங்கிற்கு பிறகு கடந்த ஏப்ரலில் இவ்வாறு வரும் விண்ணப்பங்கள் முந்தைய ஆண்டு ஏப்ரலை விட 5 சதவீதம் குறைந்திருந்தது. அதன்பிறகு ஜூலை மாதத்தில் விண்ணப்பங்கள் எண்ணிக்கை ஓரளவு அதிகரித்தது. இருப்பினும் 2019ம் ஆண்டு ஏப்ரலில் வந்த எண்ணிக்கையில் 61 சதவீதம் மட்டுமே. ஊரடங்கிற்கு முந்தைய அளவுக்கு விண்ணப்பங்கள் கடந்த மாதம்தான் அதிகரித்துள்ளது.

Related Stories:

>